மரண அறிவித்தல்

திருமதி. அமிர்தலிங்கம் புவனேஸ்வரி

Tribute Now

யாழ். கந்தர்மடம் நீராவியடியைப் பிறப்பிடமாகவும், யாழ். இந்து மகளிர் ஒழுங்கையை வதிவிடமாகவும், தற்போது கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு பரிபூரணம் தம்பதிகளின் சிரேஸ்ட மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.

 

அத்துடன்தயாளினி, காலஞ்சென்ற யாசோதன்(ராசன்), நளாயினி(ஜெயா), தர்சினி(தர்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

சிவபாதன்(சிவா), யசோதா(யசோ), சிறினிவாசன்(சிறி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

மேலும் நகுலேஸ்வரி, காலஞ்சென்ற கனகசபை, மற்றும் சதாசிவம்(குஞ்சன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை , தனபாலசிங்கம், பஞ்சலிங்கம், பத்மாவதி மற்றும் பரமசிவராசா, நவரத்தினம், மகேஸ்வரி, கனகமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி, தவமணி, கணேஸ்வரி, இரத்தினசிங்கம், யோகநாதன், மற்றும் கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

 

ஷர்மிளா- சதீசன், ரமியா, திவ்யா, சங்கீதா, அபிதா, ஜக்சன், சுபீந்தர்(சாயி), டீப்தி(சக்தி) ஆகியோரின் அன்புப் பேத்தியும், சபீஸ்னா, சஜீனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்